புழல் மத்திய சிறையில் இருந்து பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி
By DIN | Published On : 24th March 2019 03:53 AM | Last Updated : 24th March 2019 03:53 AM | அ+அ அ- |

புழல் மத்திய சிறையில் இருந்து ராஜீவ் காந்தி கொலைக் கைதி பேரறிவாளன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அந்த மருத்துவமனையில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே சிறுநீரக நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கான பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.