Enable Javscript for better performance
திருந்தி வாழ்ந்த ரௌடி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை- Dinamani

சுடச்சுட

    


    சென்னை அரும்பாக்கத்தில் திருந்தி வாழ்ந்த ரௌடி கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி (46). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ரௌடியாக வாழ்ந்த கிருஷ்ணமூர்த்தி திருந்தி வாழ்ந்து வந்தார். தற்போது அவர், தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். 
    இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை காலை  தண்ணீர் கேனை விநியோகம் செய்வதற்கா,க அரும்பாக்கத்தில் உள்ள கோயில் அருகில் மினி லாரியில் வந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் மினி லாரியிலிருந்து தப்பியோட முயன்ற கிருஷ்ணமூர்த்தியை அந்தக் கும்பல் வழிமறித்து வெட்டியது. பொதுமக்கள் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்தது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள், கோயிலுக்கு வந்த பக்தர்கள் என அனைவரும் ஓட்டம் பிடித்தனர். 
    கிருஷ்ணமூர்த்தியை வெட்டிக் கொலை செய்த கும்பல் பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடியது. இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
     கிருஷ்ணமூர்த்தியைக் கொலை செய்த கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர். கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.   இந்தச் சம்பவத்தால் அரும்பாக்கம் பகுதியில் கடைகள் மூடப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai