Enable Javscript for better performance
பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை- Dinamani

சுடச்சுட

    


    தமிழகத்தில்  பைக் டாக்ஸி சேவைக்கு (மோட்டார் சைக்கிள் டாக்ஸி) அனுமதி வழங்கப்படாததால், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன என போக்குவரத்துத் துறை அதிகாரி  தெரிவித்தார். 
    இதுகுறித்து அவர் மேலும் கூறியது: சொந்த பயன்பாட்டிற்காக வாங்கும் (வெள்ளை நிறப் பலகை) வாகனத்தை, வணிகத்திற்காகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்.   இதேபோல் கார் டாக்ஸி  நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்திய  பைக் டாக்ஸிகளைப் போக்குவரத்து காவலர்கள் பறிமுதல் செய்ததால், அந்நிறுவனம் தன் பைக் டாக்ஸி சேவையை நிறுத்திக் கொண்டது.  இதுவரை எந்த பைக் டாக்ஸி நிறுவனத்துக்கும்  அனுமதியளிக்கவில்லை. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பைக் டாக்ஸிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. முக்கியமாக பின்னால் அமர்ந்து செல்பவர் காப்பீடு பெற முடியாததால், இதுபோன்ற பாதுகாப்பில்லாத, சட்டவிரோத பயணத்தைத் தவிர்ப்பது நல்லது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai