Enable Javscript for better performance
போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சென்னை பூந்தமல்லி பகுதியில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
     இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:  
    சென்னை, பூந்தமல்லி பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த 24-ஆம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று தகாத முறையில் நடந்துள்ளார். சிறுமி அழுதுகொண்டே நடந்த விவரத்தை தனது தாயிடம் கூறியுள்ளார்.
     இது குறித்து சிறுமியின் பெற்றோர் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
    இதையடுத்து  பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை  நடத்தி, சிறுமியிடம் தகாத முறையில் நடந்த பக்ருதீனை புதன்கிழமை  கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai