Enable Javscript for better performance
விதிமீறல்: இன்று முதல் தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    விதிமீறல்: இன்று முதல் தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்

    By DIN  |   Published on : 28th March 2019 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    polling

    சென்னை மாவட்டத்தின் 3 மக்களவைத் தேர்தல், பெரம்பூர் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் விதிமீறல் குறித்து வியாழக்கிழமை முதல் (மார்ச் 28) மத்திய தேர்தல் பார்வையாளர்களிடம் நேரடியாகவும், செல்லிடப்பேசி மூலமும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜி.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், பெரம்பூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்காக மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இவர்களிடம் தேர்தல் விதிமீறல் குறித்து வியாழக்கிழமை முதல் (மார்ச் 28) பொதுமக்கள் நேரடியாகவும், செல்லிடப்பேசி மூலமும் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    வடசென்னை: வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் ஷம்லா இக்பாலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புதிய மாநில விருந்தினர் மாளிகையில் வியாழக்கிழமை முதல் தினமும் (மார்ச் 28)  பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை நேரில் சந்தித்துப் புகார் தெரிவிக்கலாம். 94999 56201 என்ற செல்லிடப்பேசி எண் மூலமும் புகார் தெரிவிக்கலாம்.
    தென் சென்னை: தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் சுதிர் ராஜ்பாலை அடையாறு முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 28) முதல் தினமும் பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை நேரில் சந்தித்துப் புகார் தெரிவிக்கலாம். 94999 56204 என்ற செல்லிடப்பேசி எண் மூலமும் புகார் தெரிவிக்கலாம்.
    மத்திய சென்னை: மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் ககன்தீப் சிங் ப்ராரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புதிய மாநில விருந்தினர் மாளிகையில் வியாழக்கிழமை (மார்ச் 28) முதல் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நேரில் சந்தித்துப் புகார் தெரிவிக்கலாம். 94999 56207 என்ற செல்லிடப்பேசி எண் மூலமும் புகார் தெரிவிக்கலாம்.
    பெரம்பூர் இடைத் தேர்தல்: பெரம்பூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கு  நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் ரஜித்புன்ஹானியை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புதிய மாநில விருந்தினர் மாளிகையில் வியாழக்கிழமை (மார்ச் 28) முதல் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நேரில் சந்தித்துப் புகார் தெரிவிக்கலாம். 94999 56211 என்ற செல்லிடப்பேசி எண் மூலமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai