மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னையில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் புதன்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை முதல் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல்
மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்


சென்னையில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் புதன்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை முதல் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை, மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி 8 ஊழியர்கள் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி, மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள் திங்கள்கிழமை மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இப் பிரச்னை தொடர்பாக தொழிலாளர் நல உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமையில் சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில், மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள் தரப்பில் சி.ஐ.டி.யூ. மாநிலச் செயலாளர் செளந்தரராஜன், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தலைமைப் பொது மேலாளர் ராஜரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்று ஊழியர்கள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.  இதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
வாபஸ்: இந்நிலையில், சென்னை குறளகத்தில்  இரண்டாவது நாளாக புதன்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது தொடர்பாக மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநரிடம் முறையீடு செய்தால், சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. 
இதனை ஏற்றுக் கொண்ட ஊழியர்கள் போராட்டத்தை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தனர். இதனால், வியாழக்கிழமை அதிகாலை முதல் வழக்கம்போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.
3 பேர் பணியிடை நீக்கம்: போராட்டத்தின்போது, ரயில்களை இயக்குவதற்கான சிக்னல் அமைப்பில் தவறான கட்டளையைக் கொடுத்து ரயில் சேவைகளைத் தடுத்ததற்காக, போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மனோகரன், பிரேம் குமார், பணிமனை கட்டுப்பாட்டாளர் சிந்தியா ரோஷன் சாம்சன் ஆகிய மூவரை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com