கடலுக்குச் செல்லாத நாட்டுப் படகுகள்:  காசிமேட்டில் முடங்கியது மீன்வரத்து

பானி புயலின் தாக்கத்தால் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஐந்து நாள்களாக நாட்டுப் படகுகள்,  கட்டுமரங்கள் அனைத்தும்
புயல் எச்சரிக்கை காரணமாக  மீன்பிடிக்கச் செல்லாததால் காசிமேட்டில் முடங்கிக் கிடக்கும் நாட்டுப் படகுகள்.
புயல் எச்சரிக்கை காரணமாக  மீன்பிடிக்கச் செல்லாததால் காசிமேட்டில் முடங்கிக் கிடக்கும் நாட்டுப் படகுகள்.


பானி புயலின் தாக்கத்தால் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஐந்து நாள்களாக நாட்டுப் படகுகள்,  கட்டுமரங்கள் அனைத்தும் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீன்வரத்து அடியோடு முடங்கியுள்ளது.
வங்கக் கடலில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க 61 நாள்கள் தடைகாலம் அமல்படுத்தப்பட்டதையடுத்து கடந்த ஏப்.15 முதல் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  ஆனால் நாட்டுப் படகுகள், கட்டுமரங்கள் மூலம் மீன்பிடிக்க தடை இல்லாததால் இவ்வகை மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து வருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன.  இவையனைத்தும் கடற்கரையிலிருந்து அதிகபட்சம் சுமார் ஐந்து முதல் பத்து கடல் மைல் தூரத்திற்கு சென்று மீன்பிடித்து வருவார்கள். விசைப்படகு மீனவர்கள் சுமார் ஒருவாரம் வரை தங்கி ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் நிலையில் நாட்டுப் படகு மீனவர்கள் ஒரே நாளில் திரும்பிவிடுவார்கள். இதனால் தடைகாலம் உள்ள போதிலும் காசிமேட்டில் மீன்வரத்து ஓரளவுக்கு இருந்து வந்தது. இந்நிலையில் பானி புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததன்  காரணமாக கடந்த ஐந்து நாள்களாக நாட்டுப் படகு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. 
இதனால் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் மீன்வரத்து அடியோடு முடங்கியது. இதனால் மீன் வாங்க வந்த பலர் மீன்கள் வரத்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தற்போது புயல் கரையைக் கடந்து விட்ட நிலையில் சனிக்கிழமை முதல் மீனவர்கள் கடலுக்குக் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com