காவலர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

காவல்நிலைய வளாகத்தில் சட்டவிரோதத் தாக்குதலில் ஈடுபட்ட  ஆய்வாளர் உள்பட  மூன்று காவல் துறையினருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


காவல்நிலைய வளாகத்தில் சட்டவிரோதத் தாக்குதலில் ஈடுபட்ட  ஆய்வாளர் உள்பட  மூன்று காவல் துறையினருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பசுபதி, மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: 
ஒரு அரசியல் கட்சியில் பல்வேறு பொறுப்பு வகித்த என்னை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நோக்கோடு, அதே பகுதியில் வசிக்கும் அரசியல் பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின்பேரில், என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜெயராஜ் 6  பொய் வழக்குகள் பதிவு செய்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றபோது, நானும் எனது குடும்பத்தாரும் திருச்சியில் தங்கி,  அங்கு கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திடும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில்  இருவேறு வழக்குகளில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் இல்லாதபோது கையெழுத்திட எங்களைக் காவலர்கள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 5.11.14 அன்று திருச்சியில் கையெழுத்திட சென்றபோது, அங்கு 10 பேருடன் வந்த விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜெயராஜ், என்னையும் எனது குடும்பத்தாரையும் காவல் நிலைய வாயிலில் வைத்து கடத்த முயற்சித்தார். மேலும் எனது மாற்றுத்திறனாளி மகன் உள்பட அனைவரையும்  தாக்கி, அவதூறாகப் பேசினார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. 
இந்த வழக்கு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சியங்களை வைத்து பார்க்கும் போது காவலர்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே மனுதாரருக்கு ரூ. 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இந்தத் தொகையை விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜெயராஜியிடம் இருந்து ரூ. 1 லட்சம் மற்றும் விருகம்பாக்கம் காவல் நிலைய காவலர், வடபழனி துணை காவல் ஆய்வாளர் விஜயபாண்டியன் ஆகியோரிடம் தலா ரூ.50 ஆயிரம் என வசூல் செய்து கொள்ளலாம். மேலும் மூன்று காவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உள்துறை முதன்மைச் செயலாளருக்கு நீதிபதி பரிந்துரை செய்து உத்தரவிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com