Enable Javscript for better performance
மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு: ஒரு மாதத்துக்கு ரூ.58 லட்சம் வரை வருவா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு: ஒரு மாதத்துக்கு ரூ.58 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறது

    By  நமது நிருபர், சென்னை  |   Published On : 06th May 2019 06:00 AM  |   Last Updated : 06th May 2019 10:18 AM  |  அ+அ அ-  |  

    metro

    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு (பார்க்கிங்) வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. பல மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்கள் நிரம்பி வழிகின்றன. இதன் மூலமாக, ஒரு மாதத்துக்கு சுமார் ரூ. 58 லட்சம் வரை வருவாய் ஈட்டப்படுகிறது.
     போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. 45 கி.மீ. தொலைவுக்கான முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்து, விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை விரிவாக்கப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
     முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 32 ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ரயில் நிலையங்களில் 30 நிலையங்களில் கட்டண வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி கொள்ளலாம். மாதாந்திர கட்டண அடிப்படையிலும் தினசரி கட்டண அடிப்படையிலும் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
     தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள நிறுத்தங்கள் நாள்தோறும் நிரம்பி வழிகின்றன. இதன்மூலமாக மாதத்துக்கு சுமார் ரூ. 58 லட்சம் வரை வருவாய் ஈட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு மட்டும் ரூ.1.92 லட்சம் வருவாய் கிடைக்கிறது.
     இதில், வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தம், வருவாய் ஈட்டுவதில் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒருநாளைக்கு சராசரி 1,821 வாகனங்கள் நிறுத்தப்படுவதன் மூலமாக, தினசரி ரூ.43 ஆயிரத்து 330 வருவாய் கிடைக்கிறது. இதைத் தொடர்ந்து, ஆலந்தூர் ரயில்நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தினசரி சராசரியாக 915 வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதன்மூலமாக, தினசரி வருவாய் ரூ.20,955 கிடைக்கிறது. வருவாய் ஈட்டுவதில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு தினசரி சராசரி 723 வாகனங்கள் நிறுத்தப்படுவதன் மூலமாக, ரூ.15,305 வருவாய் கிடைக்கிறது. இதையடுத்து, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தமிடத்தில் தினசரி சராசரியாக 613 வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதன்மூலம், தினசரி ரூ.7,290 வருவாய் ஈட்டப்படுகிறது.
     இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியது: வடபழனி ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தம் மிகப்பெரியது அல்ல. இங்கு பெரும்பாலான நாள்கள் நிரம்பி வழிகிறது. இந்த மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அதிக மக்கள் வருகின்றனர். இதுதவிர, ஷாப்பிங் செய்வதற்காக வாகன நிறுத்துமிடத்தில் இரு சக்கரத்தை நிறுத்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
     ஆலந்தூர் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் விசாலமாக, அழகான இடமாக உள்ளது.இதை பெரும்பாலும் தொழில் செய்பவர்கள் பயன்படுத்துகின்றனர். மதுரவாயல், நொளம்பூர் ஆகிய இடங்களில் இருந்து வருபவர்கள் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தமிடத்தில் வாகனத்தை நிறுத்தி ரயிலில் செல்கின்றனர். பல வாடிக்கையாளர்கள் மாதாந்திர கட்டணம் செலுத்தி வாகனத்தை நிறுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
     இதுபோல, பல்வேறு ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தம் அமைப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறோம். சென்னை மெட்ரோ ரயில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்க முன்னுரிமை அளிக்கிறோம் என்றார் அவர்.
     
     
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp