Enable Javscript for better performance
5 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    5 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள்

    By DIN  |   Published On : 10th May 2019 04:16 AM  |   Last Updated : 10th May 2019 04:16 AM  |  அ+அ அ-  |  


    பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் 1,400 இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 5 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாமல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
    பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 84 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 3,246 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் சுமார் 1,400 பேர் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாததால், அவர்கள் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
    இதுகுறித்து சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசாணையின்படி, பணி மூப்பு உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்குப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால், கடந்த 2014-இல் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் எவருக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதற்கான காரணத்தைக் கேட்டால், பதவி உயர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான வழக்கில், தகுதி உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கலாம் என நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் பின்னரும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த 1995-97 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களில் பலர் இன்று தலைமை ஆசிரியர்களாகவும், உதவிக் கல்வி அலுவலர்களாகவும் உள்ளனர். அதேவேளையில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பலர், உரிய தகுதி இருந்தும் பதவி உயர்வு பெறாமல் உள்ளனர். சிலர் ஓய்வும் பெற்றுவிட்டனர். இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    விரைவில் நடவடிக்கை: இதுகுறித்து மாநகராட்சி கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் இந்த விவகாரம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. தேர்தல் முடிந்த  பின்னர் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp