தென் சென்னை தொகுதியில் மாதிரி வாக்கு எண்ணிக்கை மையம்: தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு

தமிழகத்தில் தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் (அண்ணா பல்கலைக்கழகம்), மாதிரி வாக்கு எண்ணிக்கை மையமாக
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட முதுநிலை துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா. 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட முதுநிலை துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா. 


தமிழகத்தில் தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் (அண்ணா பல்கலைக்கழகம்), மாதிரி வாக்கு எண்ணிக்கை மையமாக அமைக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் புதன்கிழமை  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகள் அந்தந்த தொகுதிகளுக்குள்பட்ட பல்வேறு கல்லூரிகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 
 வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் மாதிரி வாக்கு எண்ணிக்கை மையத்தை தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி வாக்கு எண்ணிக்கை மையத்தை துணைத் தேர்தல் ஆணையர்கள் உமேஷ் சின்ஹா,  சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா, தேர்தல் ஆணைய  இயக்குநர் நிகில்குமார், தேர்தல் செலவின இயக்குநர் திலீப் சர்மா ஆகியோர் புதன்கிழமை பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜி.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியது: 
தமிழ்நாட்டில், தென் சென்னை மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையத்தை மாதிரி வாக்கு எண்ணிக்கை மையமாக தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இந்த மாதிரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கையை வெளிப்படையாகப் பார்க்கும் வசதி, அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னைக்கு உள்பட்ட 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com