சுடச்சுட

    

    அனைத்து மாநகர, மாவட்ட காவல்துறைகளில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு நல வாரியம்: டிஜிபி உத்தரவு

    By DIN  |   Published on : 17th May 2019 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    தமிழகத்தில் அனைத்து மாநகர மற்றும் மாவட்ட காவல்துறைகளில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நல வாரியம் அமைக்கும்படி சட்டம், ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
    தமிழக சட்டப்பேரவையில் கடந்த பட்ஜெட் தொடரின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வு பெற்ற காவலர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பின் விளைவாக, தமிழக காவல்துறையில் காவலர் நல வாரியம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
    இந்நிலையில், தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் வியாழக்கிழமை  வெளியிட்ட  உத்தரவின் விவரம்:    சென்னை பெருநகர காவல்துறை மற்றும் மாநகர காவல்துறைகளில் அமைக்கப்படும் ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்துக்கு அந்தந்த மாநகர காவல்துறை தலைமையிட துணை ஆணையர்கள் துணை இயக்குநர்களாகவும், காவலர் நலப்பிரிவு கூடுதல் துணை ஆணையரை உதவி இயக்குநராகவும், கௌரவ உறுப்பினர்களாக ஆயுதப்படை உதவி ஆணையர், இரு காவல் ஆய்வாளர்கள்,ஒரு உதவி ஆய்வாளர்,தலைமைக் காவலர், ஒரு காவலர்,ஒரு பெண் தலைமை காவலர்,இரண்டு ஓய்வு பெற்ற டிஎஸ்பி. க்கள்,ஓய்வு பெற்ற இரு காவல் ஆய்வாளர்கள், ஓய்வு பெற்ற இரு உதவி காவல் ஆய்வாளர்கள்,ஓய்வு பெற்ற இரு காவலர்கள் ஆகியோரை நியமிக்க வேண்டும்.
    இதேபோல, மாவட்ட காவல்துறை துறைகளில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை துணை இயக்குநர்களாகவும், எஞ்சிய பதவிகளுக்கு மாநகர காவல்துறையில் உள்ளதுபோல அதிகாரிகளை நியமிக்க கோரியும் உத்தரவிட்டுள்ளார். இப் பதவிகளுக்கு தகுதியானவர்களாக கண்டறியப்படுகிறவர்கள் மாநகர காவல்துறையில் ஆணையரும், மாவட்ட காவல்துறையில் அந்தந்த மண்டல ஐ.ஜி.யும் நியமிப்பார்கள்.
    மாநில அளவிலான நல வாரியம்: இப் பணிகளை இம் மாதம் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் .இதேபோல மாநில அளவிலும் ஓய்வு பெற்ற காவலர் நல வாரியம் அமைக்கப்படும். இதன் கீழே மாநகர மற்றும் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நல வாரியம் செயல்படும். மாநகர மற்றும் மாவட்ட வாரியம், மாநில நல வாரியத்திடமே அறிக்கை அளிக்க வேண்டும். 
    ஓய்வு பெற்ற காவலர் நல வாரியம் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை தமிழக காவலர் நலப் பிரிவு ஐ.ஜி. எடுப்பார்.  ஓய்வு பெற்ற காவலர்  நல வாரியம் நலத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஜூலை 10 -ஆம் தேதிக்குள் அரசுக்கு அளிக்கப்படவுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai