சுடச்சுட

    


    சென்னையில் தொழிலதிபரை கடத்தி மிரட்டி ரூ.1 கோடி பறிக்கப்பட்ட வழக்கில், தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார். 
    கொரட்டூரைச் சேர்ந்தவர் முகம்மது தாஹிர் (48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கும், வேறு ஒரு கும்பலுக்கும் தொழில் தொடர்பாக பணப் பிரச்னை இருந்ததாம். இந்நிலையில், இதுதொடர்பாக பேசதாஹிர் கடந்த 10-ஆம் தேதி இரவு துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றார். அப்போது அங்கு வந்த அந்த கும்பலுக்கும், தாஹிருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.  இந்நிலையில், அந்தக் கும்பல், ரூ.1  கோடி கேட்டு தாஹிரை சிறை வைத்து, அவரது குடும்பத்தினரை செல்லிடப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு ரூ.1 கோடி தருமாறும், பணத்தை தராவிட்டால் தாஹிரை கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டியதாம். இதையடுத்து தாஹிரின் குடும்பத்தினர் அக்கும்பலிடம் பணத்தைக் கொடுத்து தாஹிரை மீட்டனர். இதுகுறித்து தாஹிர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 
    இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஜான்சன் இளங்கோ (52) என்பவரை போலீஸார் கோயம்புத்தூரில் வியாழக்கிழமை கைது செய்தனர். இவ்வழக்கில் மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai