பணம் பறிப்பு: இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
By DIN | Published On : 20th May 2019 03:54 AM | Last Updated : 20th May 2019 03:54 AM | அ+அ அ- |

பனையூர் கடற்கரையில் ஐடி ஊழியர்களிடம் பணம் பறித்த கானாத்தூர் காவல் நிலைய காவலர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் தணிகாசலம் ஆகிய இருவரும் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருவான்மியூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரும் அவரது நண்பர் யஷ்வந்தும் கடந்த சில தினங்களுக்கு முன் பனையூர் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கார்த்திக் மற்றும் யஷ்வந்தை அங்கு வந்த கானாத்தூர் போலீஸ்காரர்கள் மிரட்டி, அவர்களிடமிருந்து பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஐடி ஊழியர்கள் இருவரும் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவலர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் தணிகாசலத்தை ஆயுதப் படைக்கு மாற்றி மாநகர காவல் இணை ஆணையர் (தெற்கு) மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.