சுடச்சுட

  

  வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவமனையில் வரும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (மே 30, 31, ஜூன் 1) நடைபெறவுள்ளது.
  இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
  உலக புற்றுநோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  மருத்துவமனை வளாகத்தில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை  நடைபெறும் இந்த முகாமில் குறிப்பிட்ட பரிசோதனைகள் இலவசமாகவும், சில பரிசோதனைகள் குறைந்த கட்டணத்திலும் மேற்கொள்ளப்படும்.
  வாயில் நாள்பட்ட புண், சாப்பிடும்போது எரிச்சல், சதை வளர்ச்சி மற்றும் வீக்கம், வெண்ணிறப் படை உள்ளவர்கள் அப்பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். 
  புகை மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்களும் இந்த முகாமில் பங்கேற்று ஆலோசனைகளைப் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai