தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மேம்படுவது அவசியம்: பிரதாப் ரெட்டி

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் தொற்றா நோய்கள் குறித்து சமூகத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி வலியுறுத்தினார்.


இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் தொற்றா நோய்கள் குறித்து சமூகத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி வலியுறுத்தினார்.
அடுத்த சில ஆண்டுகளில் 80 சதவீத இறப்புகள் அத்தகைய நோய்களால்தான் ஏற்படும் என்று சர்வதேச அமைப்புகள் ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான அதி நவீன டிஜிட்டல் பிஇடி கருவியானது தரமணியில் உள்ள அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. ரூ.5 கோடி மதிப்பிலான அக்கருவி, தெற்காசியாவிலேயே முதன் முறையாக அப்பல்லோவில்தான் நிறுவப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதன் தொடக்க விழா நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பிரதாப் ரெட்டி பேசியதாவது:
அண்மைக் காலமாக இந்தியாவில் இதய நோயால் சிறுவர்களும், வளரிளம் பருவத்தினரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 15 வயது முதல் 20 வயது வரையிலான இளம் பருவத்தினர் சிலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின்றன.
 இதயப் பாதிப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. கடந்த காலங்களில் முழு உடல் பரிசோதனை வசதிகள் அதிக அளவில் இல்லை.
தற்போது அந்த நிலை மாறிவிட்டது. அதுதொடர்பான விழிப்புணர்வும், மருத்துவ வசதிகளும் அதிகரித்து விட்டன.
இருப்பினும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர். இளம் வயதினரும், பதின் பருவத்தினரும் அத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். அப்போதுதான் தொற்றா நோய்களின் பிடியில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
உலகம் முழுவதும் 360 கோடி மக்களுக்கு புரோட்டான் புற்றுநோய் சிகிச்சை வசதிகள் சென்றடையவில்லை. ஆனால், இந்தியாவில் அந்த வசதிகள் உள்ளன. தரமான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. தற்போது அதனை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லும் விதமாகவே அடுத்த கட்டமாகவே டிஜிட்டல் பிஇடி கருவிகளை அப்பல்லோ மருத்துவமனை வாங்கியுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com