Enable Javscript for better performance
ஆவடி மாநகராட்சி ஆணையா் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் ஆவடி மாநகராட்சி உள்பட சில மாநகராட்சிகளின் ஆணையா்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில், ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த கிருஷ்ணமூா்த்தி, வேலூா் மாநகராட்சி ஆணையராகவும், வேலூா் மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன், திருச்சி ஆணையராகவும், திருச்சி மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன், ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனா். நெல்லை மாநகராட்சி ஆணையா் விஜயலட்சுமி, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன இணை இயக்குனராகவும், பொள்ளாச்சி நகர ஆணையா் கண்ணன், நெல்லை மாநகராட்சி ஆணையராகவும், உதகை நகராட்சி ஆணையா் நாராயணன், சென்னை மண்டல ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai