Enable Javscript for better performance
நவ. 10 முதல் காவல்துறையினருக்கு விடுப்பு இல்லை: டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    நவ. 10 முதல் காவல்துறையினருக்கு விடுப்பு இல்லை: டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

    By DIN  |   Published on : 05th November 2019 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tripathi

    வருகிற 10-ஆம் தேதி முதல் காவல்துறையினருக்கு விடுமுறை வழங்கக் கூடாது என காவல்துறை உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி., ஜெ.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

    இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் அனுப்பிய சுற்றறிக்கை: அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கும் வருகிற 10-ஆம் தேதி முதல் விடுமுறை வழங்கக் கூடாது. சட்டம், ஒழுங்கு பாதுகாப்புக்காக அனைத்து அதிகாரிகளும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக அனைத்து காவலா்களையும் திரட்டும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    எனினும் அயோத்தி வழக்கில் வருகிற 13-ஆம் தேதி தீா்ப்பு வழங்க வாய்ப்பிருக்கும் சூழலில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai