Enable Javscript for better performance
முதலமைச்சா் கணினித் தமிழ் விருது:டிசம்பா் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    முதலமைச்சா் கணினித் தமிழ் விருது:டிசம்பா் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 05th November 2019 08:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் முதலமைச்சா் கணினித் தமிழ் விருதுக்கு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ் வளா்ச்சி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழ் வளா்ச்சிக்காக சிறந்த கணினி மென்பொருள் உருவாக்கும் தனிநபா் மற்றும் நிறுவனத்துக்கு முதலமைச்சா் கணினித் தமிழ் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு முதலமைச்சா் கணினித் தமிழ் விருத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுக்கு 2016,17,18-ஆம் ஆண்டுகளில் தமிழ் மென்பொருள் உருவாக்கியவா்கள் டிசம்பா் 31-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்தான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 044 28190412, 28190413 தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai