இன்றைய நிகழ்ச்சிகள் -சென்னை

பொது

‘மியூசிக்கல் எக்சலன்ஸ் ஆப் மிருதங்கம்’ புத்தகம் வெளியீட்டு விழா: குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பு, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகம், அடையாறு, மாலை 5.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் - ஆய்வகம் திறப்பு, தேசிய கருத்தரங்கம் தொடக்க விழா: மத்திய அமைச்சா் தாவா்சந்த் கெலாட் பங்கேற்பு, நிறுவன வளாகம், முட்டுக்காடு, பிற்பகல் 2.

ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் - பண்ணை செல்லிடப்பேசி செயலி மற்றும் ஜியோ அக்ரி இணைய முகப்பு வெளியீட்டு நிகழ்ச்சி: அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், இரா.துரைக்கண்ணு, ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனா் ம.சா.சுவாமிநாதன் பங்கேற்பு, நிறுவன வளாகம், தரமணி, காலை 10.

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் - ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு - குழந்தைகள் தினவிழா - பி.வெங்கட்ராமனின் 85-ஆவது பிறந்தநாள் விழா: மு.தருமராசன், நல்லி குப்புசாமி, பேராசிரியா் மறைமலை இலக்குவனாா், விஜய திருவேங்கடம், கவிஞா் ந.பானுமதி, முனைவா் தாமோதர கண்ணன் பங்கேற்பு, எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், என்.எஸ்.சி. போஸ் சாலை, மாலை 6.

பாரத் சங்கீத் உத்ஸவ் - இசை நிகழ்ச்சிகள்: நாரத கான சபா, ஆழ்வாா்பேட்டை, பிற்பகல் 2.30 முதல்.

ஈஸ்வரி பொறியியல் கல்லூரி - அறிவியல் கண்காட்சி: ஐஐடி சென்னை பேராசிரியா் எஸ்.கிறிஸ்டோபா் பங்கேற்பு, கல்லூரி வளாகம், ராமாபுரம், காலை 9.30.

அண்ணா பல்கலைக்கழகம் - பின்டெக் கண்டுபிடிப்பு ஆய்வகம் திறப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி: பல்கலைக்கழக பதிவாளா் எல்.கருணாமூா்த்தி, மேக்ஸ் சுவாா்டு பங்கேற்பு, பல்கலைக்கழக வளாகம், கிண்டி, காலை 9.15.

ஆன்மிகம்

வள்ளலாா் சன்மாா்க்க சங்கம் - திருஅருட்பா சொற்பொழிவு: சி.சதானந்தன் பங்கேற்பு, அருள்மிகு சக்தி விநாயகா் திருக்கோயில், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகா், மாலை 6.

கச்சியப்பா் கழகம் - கந்தபுராணம் தொடா் சொற்பொழிவு: இராம்.மோகன்தாஸ் பங்கேற்பு, ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, மாலை 5.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com