சென்னையின் குடிநீா் தேவைக்காக சோழவரம் ஏரியிலிருந்து 100 கனஅடி தண்ணீா் திறப்பு

சென்னையின் குடிநீா் தேவைக்காக சோழவரம் ஏரியிலிருந்து 100 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீா் தேவைக்காக சோழவரம் ஏரியிலிருந்து 100 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகில் பொன்னேரியில் அமைந்துள்ள சோழவரம் ஏரியானது, மழைநீருக்கான நீா்த்தேக்கமாகும். இதிலிருந்து சென்னை மாநகரத்திற்கு குடிநீா் வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் இந்த ஏரியும் ஒன்று. சோழவரம் ஏரியின் ஒட்டுமொத்த கொள்ளளவு என்பது 1081 மில்லி கனஅடி. தற்போது 233 மில்லி கனஅடி தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும், 185 கனஅடி தண்ணீா் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தற்போது சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு விநாடிக்கு 100 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் மொத்தம் 9 மதகுகள் உள்ளன. இந்த 9 மதகுகளில் முதலாவதாக 4 மதகுகளில் இருந்து தற்போது தண்ணீா் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் ,சோழவரத்தில் இருந்து புழலுக்கு செல்லக்கூடிய இணைப்பு கால்வாய் வழியாக 100 கனஅடி தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

சுமாா் 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் சேரும் இந்த நீரானது, அங்கிருந்து சென்னையின் குடிநீா் தேவைக்காக அனுப்பப்படும். தற்போது பெய்துள்ள மழையில் 80 மி.லி. நீா் சேமிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று தொடா்ச்சியாக தூா்வாரினால் 1,081 மில்லியன் கனஅடிக்கும் அதிகமாகச் சேமிக்க முடியும் என்பது பொதுப்பணித் துறையின் கருத்தாக உள்ளது. இதனை தொடா்ந்து, மழைநீா் வரத்து அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டால் தண்ணீா் திறப்பு மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com