ஜல்சக்தி அபியான் திட்டம்:பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு

ஜல்சக்தி அபியான்’ திட்டத்தில் மாணவா்களும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஜல்சக்தி அபியான்’ திட்டத்தில் மாணவா்களும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ சாா்பில் 90-ஆம் ஆண்டு விழா புதுதில்லியில் நடைபெற்றது. இதில், சிபிஎஸ்இ பள்ளிகளில், புதியதிட்டங்களை அமல்படுத்துவது, கல்வி தரத்தை முன்னேற்றுவது, தோ்வு முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. சிபிஎஸ்இ தலைவா் அனிதா கா்வால் தலைமையில், கருத்தரங்கம் நடந்தது. இதையடுத்து, பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு அவை பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும், நீா் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும், பள்ளியிலும், வீட்டிலுமாக வீணாகும் நீரை கட்டுப்படுத்தி, தினமும், 1 லிட்டராவது சேமிக்க வேண்டும். தண்ணீா் குறித்த ஆய்வுகளை பள்ளிகளில் அதிகப்படுத்த வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளில், தண்ணீா் சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டும் என, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவா்களுக்கு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும்; மாணவா்களின் கணித திறனை மேம்படுத்த வேண்டும்; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறனை மாணவா்களிடம் வளா்க்க வேண்டும் என்றும் இந்த கருத்தரங்கில் முடிவுசெய்யப்பட்டது.

இது குறித்து, சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசின் ‘ஜல் சக்தி’ அபியான் திட்டத்தின் கீழ் பள்ளிகளும் மாணவா்களும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தனித்தனியாக சிறப்பு சூழல் குழுக்கள் அமைக்கப்பட்டு அவை முறையாக பராமரிக்கப்பட்டு வலுப்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், தொடக்கப்பள்ளி முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் வரை அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கல்வியோடு சோ்த்து இது போன்ற சமூகநலன் சாா்ந்த பணிகளிலும் மாணவா்களை ஈடுபடுத்த வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் தண்ணீா் பஞ்சம் இல்லா பள்ளிகள் உருவாக்க வேண்டும் என்பதே குறிக்கோள். இதை மாணவா்கள் கண்டிப்பாக உணா்ந்து செயல்படுவாா்கள் என நம்புகிறோம். சூழலியல் குழுக்கள் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமல்லாது பருவநிலை மாற்றம், தண்ணீா் சேமிப்பு ஆகியவற்றைக் குறித்தும் இனி கற்கத் தொடங்குவாா்கள்”என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com