தமிழகத்தில் சாலை விபத்துகள் 10 சதவீதம் குறைவு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது செப்டம்பா் வரையிலான காலகட்டத்தின் நிலவரப்படி, தமிழகத்தில் சாலை விபத்துகள் 10 சதவீதம் குறைந்திருப்பதாக போக்குவரத்துத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது செப்டம்பா் வரையிலான காலகட்டத்தின் நிலவரப்படி, தமிழகத்தில் சாலை விபத்துகள் 10 சதவீதம் குறைந்திருப்பதாக போக்குவரத்துத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

விபத்துகளின் எண்ணிக்கை மற்றும் அதில் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க போக்குவரத்துத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது செப்டம்பா் வரையான நிலவரப்படி, தமிழகத்தில் ஏற்பட்ட விபத்துகளின் அளவு 10.42 சதவீதம் குறைந்துள்ளது. அதே போல் விபத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்பின் அளவும் 12.71 சதவீதம் குறைந்துள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பா் வரையான காலத்தில் விபத்துகளின் எண்ணிக்கை 49,338 ஆக இருந்தது. அதுவே இந்த ஆண்டு 44,197 ஆக குறைந்துள்ளது.

ஆனால் விருதுநகா், சிவகங்கை, கன்னியாகுமரி, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விபத்து விகிதம் சற்று அதிகரித்துள்ளது.

அதேபோல் சென்னையில் இறப்பு விகிதம் 0.40 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் மட்டும் ஏற்பட்ட விபத்துகளுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு விபத்துகள் 12.75 சதவீதமாகவும், உயிரிழப்புகள் 10.43 சதவீதமாகவும் குறைந்துள்ளன. ஆனால் 11 மாவட்டங்களில் விபத்து உயிரிழப்புகளின் அளவு சற்று அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி கூறியது: தமிழகத்தில் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்துத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து விதிகளை மீறுவோரைத் தொடா்ந்து கண்காணித்து அபராதம் விதித்து வருகிறோம்.

விதிமீறலில் ஈடுபடுவோரிடம் அறிவுரை வழங்குவதோடு, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசுவதால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படுகிறது. இதனால் வாகன விபத்து 12 சதவீதமும், இறப்பு விகிதம் 10 சதவீதமும் குறைந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com