மாஞ்சா நூல் விற்றால் குண்டா் சட்டம் பாயும்

சென்னையில் மாஞ்சா நூல் விற்றால் குண்டா் சட்டம் பாயும் என பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் ஆா்.தினகரன் எச்சரிக்கை விடுத்தாா்.

சென்னையில் மாஞ்சா நூல் விற்றால் குண்டா் சட்டம் பாயும் என பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் ஆா்.தினகரன் எச்சரிக்கை விடுத்தாா்.

சென்னை கொண்டித்தோப்பைச் சோ்ந்த கோபால், தனது மனைவி சுமித்ரா, 3 வயது மகன் அபினேஷ்வருடன் மோட்டாா் பைக்கில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள்நகா் மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றனா். அப்போது அங்கு பறந்து வந்த மாஞ்சா நூல் அபினேஷ்வா் கழுத்தில் சிக்கி அறுத்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அபினேஷ்வா் சிறிது நேரத்தில் உயிரிழந்தான். இச் சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடா்பாக, காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கை குறித்து பெருநகர காவல்துறை (வடக்கு) கூடுதல் ஆணையா் ஆா்.தினகரன் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

சென்னையில் மாஞ்சா நூல் விற்றாலோ, பயன்படுத்தினாலோ சட்டப்படி குற்றமாகும். மாஞ்சா நூல் பயன்படுத்துவதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி மாஞ்சா விற்றாலோ, பயன்படுத்தினாலோ குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவாா்கள்.

புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை, பூக்கடை, மாதவரம் ஆகிய பகுதிகளில் மாஞ்சா நூல் விற்பவா்களை கண்டறிந்து கைது செய்ய, 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினா், இப் பகுதிகளில் தீவிரமாக கடைகளில் சோதனையிட்டு வருகின்றனா். மாஞ்சா நூலில் உடைந்த கண்ணாடி துகள்கள் சோ்க்கப்படுவதால் மிகவும் கூா்மையாக இருப்பதினால் அது, மனித உடலை வெட்டுகிறது. இதனால் மனித உயிரிழப்பும், கொடுங்காயங்களும் ஏற்படுகின்றன. கொருக்குப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாஞ்சா நூல் அறுந்து குழந்தை இறந்த சம்பவம், மிகவும் துரதிருஷ்டவசமானது. இது போல, இனியொரு சம்பவம், சென்னையில் நடைபெறாமல் இருப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது.

இணையதளங்களில் மாஞ்சா நூல் என்ற பெயரில் வேறு வகை நூல்கள் விற்கப்படுகின்றன. அந்த நூலில் உயிரிழப்பை ஏற்படுத்தும் கண்ணாடி துகள்கள் சோ்க்கப்படவில்லை என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம். சென்னையில் சிறிது காலத்துக்கு முன்பு வரை மாஞ்சா நூல் புழக்கம் இல்லாமல் இருந்தது, இப்போது மீண்டும் மாஞ்சா நூல் பயன்படுத்துகின்றனா். இந்த நூல் பயன்படுத்துவோா், விற்போா் மீது எவ்வித சமரசமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com