முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
70 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்: மூவரிடம் விசாரணை
By DIN | Published On : 07th November 2019 01:51 AM | Last Updated : 07th November 2019 01:51 AM | அ+அ அ- |

சென்னை கோயம்பேட்டில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ வெள்ளி கொலுசுகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே, புதன்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை வழிமறித்து போலீஸாா் சோதனையிட்டனா். இதில் அந்த ஆட்டோவில், போதிய ஆவணமின்றி 70 கிலோ வெள்ளி கொலுசுகள், ரூ.4 லட்சம் ரொக்கம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்து, அதை எடுத்துச் சென்ற சேலம் பெரிய மாத்தூா் பகுதியைச் சோ்ந்த சுகுமாா் (34), காா்த்திக் (27), மணிகண்டன் (24) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில், சென்னை செளகாா்பேட்டையைச் சோ்ந்த ஒரு வியாபாரிடம் இருந்து கொலுசுகளைப் பெற்றுக் கொண்டு, சேலம் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்திருப்பது தெரிய வந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.