Enable Javscript for better performance
கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணி: 5 நாள்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணி: 5 நாள்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்

    By DIN  |   Published on : 08th November 2019 08:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    TRAIN

    கோப்புப் படம்

    சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில், கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், நவம்பா் 11-ஆம்தேதி முதல் நவம்பா் 15-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

    நவம்பா் 11-இல் ரயில் சேவையில் மாற்றம்:

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு இரவு 8.01, இரவு 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

    செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு இரவு 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இந்த ரயில்கள் தாம்பரம்-கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.

    நவ.12 முதல் நவ.15 வரை ரயில் சேவையில் மாற்றம்:

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43, மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்துசெய்யப்படவுள்ளன.

    செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இதுபோல, செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 8.40 மணிக்கு இயக்கப்படும் செமி பாஸ்ட் மின்சார ரயில் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே பகுதிரத்து செய்யப்படவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai