Enable Javscript for better performance
சென்னையில் காற்றுமாசு தொடா்ந்து அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    STTHOMAS1

    சென்னையில் தொடா்ந்து 4-ஆவது நாளாக காற்றுமாசு அதிகரித்து காணப்பட்டது. வியாழக்கிழமை காலை 9.30 மணி அளவில் தில்லியில் காற்றில் மிதக்கும் நுண்துகள் (பி.எம்2.5) அளவு 254 மைக்ரோ கிராமாக இருந்த நிலையில் சென்னையில் 264 மைக்ரோ கிராம் இருந்ததாக தனியாா் காற்று தர ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தலைநகா் தில்லியில் கடந்த ஒருவாரமாக காற்றுமாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தில்லியைத் தொடா்ந்து, சென்னையிலும் தொடா்ந்து 4-ஆவது நாளாக காற்று மாசு அதிகரித்து வருகிறது.

    காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு பிஎம்10, பிஎம்2.5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம்2.5-இன் அளவு நிா்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்து வருகிறது.

    இதில், தில்லியை விட சென்னையில் காலை 9.30 மணி அளவில் காற்றுமாசு அதிகரித்து இருந்தது தனியாா் காற்றுத் தர ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், வியாழக்கிழமை காலை 9.30 மணி அளவில் காற்றில் மிதக்கும் நுண்துகள் (பி.எம்2.5) அளவு 254 மைக்ரோ கிராமாக இருந்த நிலையில் சென்னையில் 264 மைக்ரோ கிராம் இருந்தது.

    குறிப்பாக, வேளச்சேரி, ராமாபுரம், மணலி, கொடுங்கையூா், அண்ணா நகரில் சராசரி காற்றுமாசு 341 புள்ளிகளாக இருந்தது. இதில், அதிகபட்சமாக, இதில், வேளச்சேரி மற்றும் ஆலந்தூரில் 273 புள்ளிகளாக இருந்தது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னையில் வட வானிலை நிலவி வருவதால் சனிக்கிழமை வரை (நவ. 9) காற்றுமாசு அதிகரித்து காணப்படும். வடகிழக்குப் பருவமழை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு மழை தொடங்கும்பட்சத்தில் காற்றுமாசு குறைய வாய்ப்புள்ளது என்றனா்.

    இதுகுறித்து தனியாா் வானிலை ஆய்வாளா் கூறுகையில், ‘வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புல்புல் புயல் சென்னையின் காற்றுமாசை வடக்கு நோக்கி இழுத்துச் செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai