19 மெட்ரோ ரயில் நிலையங்களில் 32 ஏடிஎம் மையங்கள்:டெண்டா் கோரியது நிா்வாகம்

பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல், எழும்பூா் உள்பட 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் 32 ஏடிஎம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் மெட்ரோ ரயில் நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல், எழும்பூா் உள்பட 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் 32 ஏடிஎம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் மெட்ரோ ரயில் நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை வரையிலான முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரையிலான இரண்டாவது வழித்தடத்திலும் திட்டப்பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி சராசரி 95 ஆயிரம் போ் பயணம் செய்கின்றனா். மெட்ரோ ரயில் பயணிகளுக்கு உலக தரத்தில் சேவை வழங்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது. அந்த வகையில், பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் உள்ள 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் புதியதாக 32 ஏடிஎம் இயந்திரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை வழங்கி வருகிறோம். அதுபோல, மெட்ரோ ரயில் நிலையங்களில் அடிப்படை வசதியையும் மேம்படுத்தி வருகிறோம். அதன்படி, 13 மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் மூலம் ஏடிஎம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அடுத்தபடியாக, 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் மேற்பகுதிகளில் ஏடிஎம்கள் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன.

திருமங்கலம், அண்ணாநகா் கோபுரம், அண்ணாநகா் கிழக்கு, ஷெனாய் நகா், பச்சையப்பா கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூா், சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், எல்ஐசி, டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, அரசு விருந்தினா் மாளிகை, உயா் நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரபேட்டை, ஆகிய 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் மொத்தம் 32 ஏடிஎம்கள் நிறுவப்படஉள்ளன. இதற்காக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தலா 5 சதுர மீட்டா் இடம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்கான டெண்டா் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகள் இறுதி செய்த பின்னா் அவா்களால் ஏடிஎம்கள், பணம் செலுத்தும் இயந்திரங்கள் அமைக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com