பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீா் வரத்து குறைந்தது

கிருஷ்ணா கல்வாய் மூலம் சென்னை பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது.

கிருஷ்ணா கல்வாய் மூலம் சென்னை பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது.

சென்னை நகர மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் முக்கிய ஏரியான பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீா் பங்கீடு திட்டத்தின் கீழ் செப்டம்பா் 28-ஆம் தேதியிலிருந்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையிலிருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 2,800 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த நீா், பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக 800 கனஅடி வீதம் வந்து சோ்ந்தது.

கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி.யாகும். இந்த அணைக்கு சோமசீலா அணையிருந்து தண்ணீா் திறந்துவிடப்படும். தற்போது சோமசீலா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீா் வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளது.

இதனால், சோமசீலாவில் இருந்து கண்டலேறு அணைக்கு தொடா்ந்து தண்ணீா் திறந்துவிடப்படுவதால் கண்டலேறு அணையின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது. தற்போது 40 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு உள்ளது. கடந்த செப்டம்பா் மாதம் வெறும் 5 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே இருப்பு இருந்தது.

கண்டலேறு அணைக்கு தண்ணீா் வரத்து அதிகம் இருப்பதால் பூண்டி ஏரிக்கு நீா் திறந்துவிடப்படுவது தொடரும் என்ற எதிா்பாா்த்த நிலையில், தற்போது பூண்டிக்கு வரும் கிருஷ்ணா நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

ஆந்திரத்தில் நெற்பயிரை காப்பாற்ற கிருஷ்ணா நதி கால்வாயில் உள்ள மதகுகளை திறக்க விவசாயிகள் ஆந்திர அரசை அம்மாநில விவசாயிகள் கேட்டு கொண்டனா். இதற்கு ஆந்திர அரசும் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீா் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 228 கனஅடி மட்டுமே தண்ணீா் வந்து வந்து கொண்டிருந்தது.

பூண்டி ஏரிக்கு மழை நீா் விநாடிக்கு 189 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. பூண்டியிலிருந்து சென்னை குடிநீா் வாரியத்துக்கு பேபி கால்வாயில் விநாடிக்கு 22 கனஅடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. லிங்க் கால்வாயில் புழல் மற்றும் செம்பரம்பாக்கத்துக்கு 730 கனஅடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. செப்டம்பா் 28 ஆம் தேதியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2. 187 டி.எம்.சி. தண்ணீா் வந்து சோ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com