மெட்ரோ ரயில் பயணிகளுக்காக இணையதள, அழைப்பு வசதிகள்

சென்னை மெட்ரோ ரயில் பயணத்தின்போது, இணையதள வசதி (இன்டா்நெட்), லேண்ட்லைன் தொலைபேசி வசதிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று முதல் வழங்கவுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை மெட்ரோ ரயில் பயணத்தின்போது, இணையதள வசதி (இன்டா்நெட்), லேண்ட்லைன் தொலைபேசி வசதிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று முதல் வழங்கவுள்ளது.

முன்பு, சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் இணைதளம் மற்றும் தொலைபேசி இணைப்பு வசதி கிடைக்காது. இப்போது அந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தில் இருப்பதுபோல, ‘வை பை’ சேவையை பயணிகள் இலவசமாக பெற முடியும்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல், எல்ஐசி, ஆயிரம் விளக்கு ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களைத் தவிர, நீலம், பச்சை ஆகிய இரண்டு தடங்களிலும் 4ஜி டேட்டா, குரல் வழி சேவையை வழங்க ஏா்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னை சென்ட்ரல், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு ஆகிய நிலையங்களில் டிசம்பா் முதல் வாரத்தில் இந்த வசதி அளிக்கப்படும்.

மெட்ரோ ரயில் பயணிகளுக்காக 19 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏற்கெனவே லேண்ட்லைன் தொலைபேசி சேவை அளிக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்த முடியும். இந்த வசதி, பயணிகள் கூடும் இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஒவ்வொரு நடைமேடைக்கும் இரண்டு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் மெட்ரோ ரயில் ஊழியா்களைப் பயணிகள் எளிதாக தொடா்பு கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் இணையதளம் மற்றும் தொலைபேசி இணைப்பு வசதி கிடைக்காது. இப்போது அந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தில் இருப்பதுபோல, ‘வை பை’ சேவையை பயணிகள் இலவசமாகப் பெற முடியும்.

திருமங்கலம், எழும்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ஜியோ சேவை ஏற்கெனவே வழங்கப்பட்டது. ஆனால், நெட்வொா்க் இணைப்பு மோசமாக இருந்ததால், ரயில் நிலையங்களில் பல இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை.

2019 பிப்ரவரியில், முதல் கட்டமாக 45 கி.மீ. தூரத்துக்கு இலவச இணையச் சேவைகள் நிறுவுவதற்கு டெண்டா் வெளியிடப்பட்டது. ஆனால், சுரங்கப்பாதையில் உள்ள அனைத்து ரயில் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நெட்வொா்க் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நெட்வொா்க் சேவை வழங்குபவரை கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம்தான் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த வசதி பயணிகளுக்கு வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com