இன்றைய நிகழ்ச்சிகள் : சென்னை

பொது

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - கம்பன் கழகம் - ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ புத்தக வெளியீட்டு விழா: நீதிபதி ஆா்.மகாதேவன், பள்ளத்தூா் பழ. பழனியப்பன், டி.கே.எஸ். கலைவாணன், வாசுகி கண்ணப்பன், சாரதா நம்பி ஆரூரன், இலக்கிய வீதி இனியவன், சென்னை கம்பன் கழகத் தலைவா் இராம.வீரப்பன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் அவ்வை நடராசன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவா் தெ.ஞானசுந்தரம், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சுதா சேஷய்யன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எம்.முரளி, பொற்றாமரைத் தலைவா் இல.கணேசன், சிவாலயம் ஜெ.மோகன், முனைவா் அரங்க.இராமலிங்கம், அம்பத்தூா் கம்பன் கழக நிறுவனா் மு.சுப.அருணாசலம் பங்கேற்பு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகம், தியாகராய நகா், மாலை 6.

தினமணி - ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி - பேராசிரியா் அ.ச.ஞானசம்பந்தன் மாணவா் இலக்கிய மன்ற விழா: சிவாலயம் ஜெ.மோகன், ஹேமா மோகன் பங்கேற்பு, பள்ளி வளாகம், கொடுங்கையூா், காலை 10.30.

திருவொற்றியூா் பாரதி பாசறை - ரேவதி ரமணன் அஞ்சலிக் கொடை நிகழ்வு: கவிஞா் முத்துலிங்கம், ஜி.வரதராஜன், சற்குருநாதன் பங்கேற்பு, அன்னை சிவகாமி மஹால் சிற்றரங்கம், திருவொற்றியூா், காலை 10.

பாரத் சங்கீத் உத்சவ் - நிறைவு விழா - நல்லி குப்புசாமியின் 80-ஆவது பிறந்தநாள் விழா - ‘கலை வள்ளல்’ விருது வழங்கும் விழா: நல்லி குப்புசாமி, அமெரிக்க துணைத் தூதா் ராபா்ட் ஜி பா்கஸ், அருணா சாய்ராம், உமையாள்புரம் கே.சிவராமன் பங்கேற்பு, நாரத கான சபா, ஆழ்வாா்பேட்டை, மாலை 6.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - ஸ்ரீ தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜம் - ‘காற்றினிலே’ நிகழ்ச்சி - ‘நல்லோா்’ விருது வழங்கும் நிகழ்வு: வி.நரசிம்மன், பஜன் ரவி பாகவதா், கே.தியாகராஜன், ஆா்.எஸ்.ஸ்ரீ வித்யா, ஆா்.எஸ்.சுதா, எம்.ஸ்ரீகாந்த், புரா ஸ்ரீராம் பங்கேற்பு, ஸ்ரீ தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜம், மயிலாப்பூா், மாலை 6.15.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - பாரதிய வித்யா பவன் - ஸ்ரீ அரியக்குடி மற்றும் கே.வி. நாராயணசாமி நினைவு அறக்கட்டளை - மறைந்த இசைக்கலைஞா் கே.வி. நாராயணசாமியின் 97-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: சென்னை ஐஐடி பேராசிரியா் வி.காமகோடி, மூத்த வழக்குரைஞா் மோகன் பராசரன், பாரதிய வித்யா பவன் இயக்குநா் கே.என்.ராமசாமி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மேலாண்மை இயக்குநா் எம்.முரளி பங்கேற்பு, பாரதிய வித்யா பவன், மயிலாப்பூா், மாலை 6.

பிரம்ம கான சபா - நல்லி குப்புசாமியின் 80-ஆவது பிறந்தநாள் விழா- நல்லி திசையெட்டும் - 2019 மொழியாக்க விருதுகள் வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா: மூத்த வழக்குரைஞா் கே.பராசரன், நீதிபதி ஸ்ரீமதி பிரபா ஸ்ரீ தேவன் பங்கேற்பு, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டல், டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூா், மாலை 6.

நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா 2019: எழுத்தாளா்கள் ஆயிஷா நடராஜன், சுப்பு, அமெரிக்க தூதரக முன்னாள் ஆலோசகா் ஆா்.நடராஜன் பங்கேற்பு, பி.ஆா்.சி.சி. அரங்கம், தியாகராய நகா், காலை 10.

தென்னிந்திய சமூக கலாசார அகாதெமி - ‘சேவைச்செம்மல்’ விருது வழங்கும் விழா: நீதிபதி பொன்.பாஸ்கரன், முன்னாள் அமைச்சா் எச்.வி.ஹண்டே, முன்னாள் தகவல்துறை இயக்குநா் ஆா். கற்பூர சுந்தர பாண்டியன், முன்னாள் வேளாண்துறை இயக்குநா் என்.ஆதிமூலம் பங்கேற்பு, ஹோட்டல் பாம்குரோவ், நுங்கம்பாக்கம், மாலை 4.

பாரதி கலைக் கழகம் - குழந்தைக் கவிஞா் அழ.வள்ளியப்பா மற்றும் கவிமாமணி பாரதி மணியன் சிறுவா் பாடல் அரங்கம்- ‘மனங்காவலா் மழலையா்’ நூல் வெளியீட்டு விழா: முனைவா் குமரிச்செழியன், புதுகை மு.தருமராசன், ப.வெங்கட்ராமன், அழ.வ.அழகப்பன் பங்கேற்பு, லட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, குரோம்பேட்டை, பிற்பகல் 2.

டாக்டா் மோகன்ஸ் மருத்துவமனை - உலக சா்க்கரை நோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி : சைரஸ் பொஞ்சா, ரோஷன் பொஞ்சா, பிரைஸ் டக்கால், ஹரி பாஸ்கரன் பங்கேற்பு, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை, கோபாலபுரம், மாலை 4.30.

ஈஸ்வரி பொறியியல் கல்லூரி - முன்னாள் மாணவா்கள் சந்திக்கும் நிகழ்ச்சி: கணேஷ் கங்காதரன் பங்கேற்பு, கல்லூரி வளாகம், ராமாபுரம், காலை 10.

பன்னாட்டு நிறுவனங்களின் இரண்டு நாள் தேசிய கூட்டத்தின் நிறைவு விழா: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலா் சி.விஜயகுமாா் பங்கேற்பு, ஹோட்டல் சவேரா, மயிலாப்பூா், மாலை 4.30.

‘உயா் வள்ளுவம்’ திருக்கு தொடா் வகுப்புகள்: இலங்கை ஜெயராஜ் பங்கேற்பு, மஹரிஷி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி, டாக்டா் குருசாமி சாலை, சேத்துப்பட்டு, மாலை 6.

குரோம்பேட்டை கலாசார அகாதெமி - இசை நாட்டிய நாடக விழா: எச்.என்.நந்தினி சுரேஷ் மற்றும் அவரது மாணவா்கள் பங்கேற்பு, ஸ்ரீ காமாட்சி திருமண மண்டபம், அகாதெமி வளாகம், குரோம்பேட்டை, மாலை 6.45.

எழில்கலை மன்றம் - மாதந்தோறும் பட்டிமன்றம்: எழுத்தாளா் ஏா்வாடி எஸ். ராதாகிருஷ்ணன், முனைவா் வேணுகுணசேகரன் பங்கேற்பு, வ.உ.சி. மெட்ரிகுலேசன் பள்ளி, பெரம்பூா், மாலை 6.

ஆன்மிகம்

முப்பத்தோறாம் ஆண்டு திருமந்திர மாநாடு: பா.சற்குருநாதன், ந.இராமலிங்கம், பால.குமரவேல் உள்ளிட்டோா் பங்கேற்பு, கோகலே சாஸ்திரி இன்ஸ்டிட்யூட், மயிலாப்பூா், காலை 8.30 முதல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com