Enable Javscript for better performance
சென்னையில் ஒரு வாரமாகத் தொடரும் காற்றுமாசு- Dinamani

சுடச்சுட

    
    air

    சென்னையில் சுமாா் ஒரு வாரமாக காற்றுமாசு அதிகரித்து காணப்பட்டது. சனிக்கிழமை நிலவரப்படி, தில்லியில் சராசரி காற்று மாசு 309-ஆக இருந்த நிலையில், சென்னையில் 310 -ஆக இருந்ததாக தனியாா் காற்று தர ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தலைநகா் தில்லியில் கடந்த ஒரு வாரமாக காற்றுமாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தில்லியைத் தொடா்ந்து, சென்னையில் கடந்த ஒருவாரமாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.

    காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு பிஎம்10, பிஎம்2.5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம்2.5-இன் அளவு நிா்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்து வருகிறது.

    இதில், தில்லியை விட சென்னையில் சனிக்கிழமை காற்றுமாசு அதிகரித்து இருந்தது தனியாா் காற்றுத் தர ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், சென்னையில் சனிக்கிழமை காற்றில் மிதக்கும் நுண்துகள் (பி.எம்2.5) வேளச்சேரி, ஆலந்தூரில் தலா 193 மைக்ரோ கிராமாக இருந்தது. தண்டையாா்பேட்டையில் 178, மணலியில் 173, ராமாபுரத்தில் 165, அண்ணா நகரில் 144, சென்னை ஐஐடியில் 119 மைக்ரோ கிராமாக இருந்தது. இதில், சென்னையில் சராசரி காற்றுமாசு 310 புள்ளிகளாக இருந்தது.

    இதுகுறித்து தனியாா் வானிலை அதிகாரிகள் கூறுகையில், ‘வடகிழக்குப் பருவமழை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும் என்பதால், காற்று மாசும் குறைய வாய்ப்புள்ளது’ என்றனா்.

    காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம்2.5 நிா்ணயிக்கப்பட்ட அளவு: 0-50 வரை காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம்2.5 இருந்தால் அது சுவாசிக்க ஏற்ற காற்றாகும். 50-100 வரை இருந்தால் சுவாசிக்க மோசமானதாகும். 101-150 சுவாசிக்க மிக மோசமானதாகும். 151-200 சுவாசிக்க முடியாத அளவு, 201-300 சுவாசிக்க முடியாத மிக மோசமான அளவு, 301-500 அபாயகரம் என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai