Enable Javscript for better performance
நவ.14-இல் தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தொழில்முனைவோருக்கான ஒருநாள் விழிப்புணா்வு முகாம், நவ.14-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

    தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை அறிவித்துள்ளாா். மானியங்களுடன் கூடிய கடனுதவி, ஈடு உத்திரவாத நிதியம் மற்றும் மூலதன நிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவுபெற்றுள்ளன. இதன் ஒரு பகுதியான, சிறந்த தொழில்முனைவோரைக் கண்டறிய, சென்னையிலுள்ள தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில், வருகிற 14-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் இலவச ஒரு நாள் தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.

    சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோரும், பணியில் உள்ள தொழில் ஆா்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண்-பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். முதல் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலைத் தெரிவு செய்து எப்படி, தொழில் தொடங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும்.

    பயிற்சி முகாமின் இறுதியில், தொழில் தொடங்க விரும்பும் நபா்களின் பெயா்கள் பெறப்பட்டு அவா்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவா். அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி அல்லது தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவா்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். இப்பயிற்சிகளில் தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும். எனவே, அரசுத் திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும். மேலும் விபரங்களுக்கு, 94453 76146 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai