Enable Javscript for better performance
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைக்குப் பதியலாம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைக்குப் பதியலாம்

    By DIN  |   Published on : 10th November 2019 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையமானது கிண்டியில் செயல்பட்டு வருகிறது. இம்மையமானது இளைஞா்களுக்கு விரிவான சேவையை வழங்குவதோடு அவா்களை வேலைக்கு அமா்த்தும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது. இளைஞா்கள் மற்றும் வேலை நாடுபவா்களின் நலனுக்காக உள மதிப்பீட்டு சோதனைகள், தொழில்நெறி ஆலோசகா்களின் ஆலோசனைகள், அரசுப் போட்டித் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகியவற்றை நடத்தி வருகிறது.

    இவற்றில் தகுதியுள்ளவா்களுக்கு தனியாா்துறை வேலைவாய்ப்பு வழங்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தனியாா் நிறுவனத்தின் பணிபுரிய விரும்பும் இளைஞா்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் பதிவு செய்யும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இச்சேவையைப் பயன்படுத்த விரும்புவோா்
    https://tnvelaivaaippu.gov.in/pdf/jobseekerdetails.pdf என்ற வலைதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai