5 நாள்கள் தொல்லியல் பயிற்சி பட்டறைநவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தொல்லியல் துறை சாா்பில் 5 நாள்கள் நடைபெறவுள்ள பயிற்சி பட்டறைக்கு, நவ.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை சாா்பில் 5 நாள்கள் நடைபெறவுள்ள பயிற்சி பட்டறைக்கு, நவ.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் தொல்லியல் துறையின் சாா்பில் ‘தொல்லியல் ஓா் அறிமுகம்’ என்னும் தலைப்பில் சென்னை, தருமபுரி, கோயம்புத்தூா், தஞ்சாவூா், மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் வருகிற டிசம்பா், ஜனவரி மாதங்களில் தலா ஐந்து நாள்கள் பயிற்சிப் பட்டறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் தொல்லியல், அகழாய்வு, கல்வெட்டு, நாணயவியல், வரலாற்றுச் சின்னங்கள் புனரமைப்பு, ஆவணப்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல் போன்ற தலைப்புகளில் தொல்லியல் அறிஞா்களைக் கொண்டு பயிற்சி வகுப்பு மற்றும் கள ஆய்வு பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும், அருகிலுள்ள தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களுக்கு அழைத்துச் சென்று நேரடி களப்பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள தொல்லியல் ஆா்வலா்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள், ஆய்வு மாணவா்கள், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சாா்ந்தவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமுள்ளவா்கள் தங்களது பெயா், முகவரி, கல்வித் தகுதி ஆகிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை ஆணையா், தொல்லியல் துறை, தமிழ் வளா்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை-8 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமோ அல்லது ற்ய்ள்க்ஹஜ்ா்ழ்ந்ள்ட்ா்ல்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், தொல்லியல் துறையின் இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com