தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்: நட்சத்திர விடுதிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து, விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த நட்சத்திர விடுதிகளுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து, விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த நட்சத்திர விடுதிகளுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து தமிழக அரசு

உத்தரவிட்டது. இந்த உத்தரவு, தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், பிளாஸ்டிக் பொருள்கள் தவிா்ப்பு குறித்து, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவா் ஏ.வி.வெங்கடாசலம், உறுப்பினா் செயலாளா் டி.சேகா் ஆகியோா் நடத்திய இந்தக் கூட்டத்தில் லீலா பேலஸ், ஐடிசி, தாஜ் கோரமண்டல், ஜி.ஆா்.டி., உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர விடுதிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவல்: நட்சத்திர விடுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கைகளை குறும்படங்களாக தயாரிக்கலாம். பள்ளிக் குழந்தைகள் உள்பட பல்வேறு தரப்பினரையும் இணைத்து பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம். மழை நீா் சேகரிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி அவற்றைச் செயல்படுத்தலாம் என்று கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் எவை, எவை, அதற்கான மாற்றுப் பொருள்கள் எவை என்பன குறித்த விளக்கப் படங்கள் அடங்கிய கையேடு, சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், விழிப்புணா்வு குறுந்தகடுகள் ஆகியன கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com