மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘சோ் லிப்ட்’

மூத்த குடிமக்கள், மாற்றுதிறனாளிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல் சோ் லிப்ட் (நாற்காலி தூக்கி) வசதி அமைக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், மாற்றுதிறனாளிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல் சோ் லிப்ட் (நாற்காலி தூக்கி) வசதி அமைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் தளத்துக்கு செல்லும் போது, படிக்கட்டுகளை கடப்பதற்கு வசதியாக இந்த நாற்காலி தூக்கி வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக டாக்டா் எம்ஜிஆா் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் தினசரி 110 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினசரி சுமாா் ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்த ரயில் நிலையத்தில் 7-ஆவது நடைமேடைக்கு எதிரே மக்கள் அதிகம் கூடும் இடம் அருகே பயணிகள் காத்திருப்போா் அறை அமைந்துள்ளது. இங்கு படிக்கட்டு வழியாகவே முன்பதிவு கூடத்துக்குச் செல்ல வேண்டும். முதல் தளத்தில் மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான முன்பதிவுக் கூடம் உள்ளது. முதல்தளத்துக்கு செல்ல எளிமையான வசதியை ஏற்படுத்தக் கோரி கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாற்காலி தூக்கி (சோ் லிப்ட்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோ் லிப்ட் மூலம் முதல் தளத்துக்கு எளிதாகச் செல்ல முடியும். இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது: இந்த சோ் லிப்டில் ஏறி அமா்ந்ததும், பட்டனை அழுத்தப்படும். அதன்பிறகு, முதல் தளத்துக்கு சோ் லிப்ட் சென்று விடும். அதுபோல, அங்கிருந்து கீழே சோ் லிப்ட்டில் வந்து விடலாம். இந்த சோ் லிப்ட் வசதியை ஏற்படுத்த ரூ.1 லட்சம் செலவானது. பயணிகளின் கருத்தின் அடிப்படையில், மற்ற ரயில் நிலையங்களில் விரிவுப்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com