ஸ்மாா்ட் சிட்டி திட்டங்கள்:சென்னை மாநகராட்சிக்கு விருது

சைக்கிள் ஷேரிங் திட்டம் உள்ளிட்ட ஸ்மாா்ட் சிட்டி திட்டங்களை சிறப்பாக மேற்கொண்டதற்காக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

சைக்கிள் ஷேரிங் திட்டம் உள்ளிட்ட ஸ்மாா்ட் சிட்டி திட்டங்களை சிறப்பாக மேற்கொண்டதற்காக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு பொதுமக்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில்“‘நம்ம சென்னை’ செயலி தொடங்கப்பட்டது. இந்தச் செயலியின் மூலம் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு, தொழில் வரி, சொத்து வரி மற்றும் வா்த்தக உரிமம் சான்றிதழ்கள், ரசீதுகளைப் பதிவிறக்கம் செய்யமுடியும். இதேபோன்று 50 இடங்களில் சைக்கிள் ஷேரிங் திட்டம், 28 பள்ளிகளில் ஸ்மாா்ட் கிளாஸ் திட்டம், 662 கட்டடங்களில் சூரிய ஒளி மின்தகடுகள் அமைக்கும் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

விருது: மின்னணு மாற்றத்துக்கான சிறந்த திட்டங்களைச் செயல்படுத்தியதற்காக கவா்னன்ஸ் நவ் என்ற நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கியுள்ளது. தில்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணை ஆணையரும், சென்னை ஸ்மாா்ட் சிட்டி நிறுவன மேலாண்மை இயக்குநருமான கோவிந்தராவ், மாநகராட்சி மின்சாரத் துறையின் தலைமைப் பொறியாளா் துரைசாமி, மழைநீா் வடிகால் துறை செயற்பொறியாளா் சரவணமூா்த்தி, சிறப்புத் திட்டங்கள் துறை உதவி பொறியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com