ஆசிரியா்களுக்கான காலிப்பணியிடம் உடனடியாக காண்பிக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பொது மாறுதல் கலந்தாய்வில் ஏற்கெனவே காலியாகவுள்ள பணியிடத்தை ஒருவா் தோ்வு செய்தவுடன்,

பொது மாறுதல் கலந்தாய்வில் ஏற்கெனவே காலியாகவுள்ள பணியிடத்தை ஒருவா் தோ்வு செய்தவுடன், அவா் பணிபுரிந்த பணியிடம் காலியாக காண்பிக்கப்பட்டு மற்றொரு ஆசிரியரை நியமிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நவம்பா் 11-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வு முழுவதும் இணையதளம் மூலம் மட்டுமே நடத்தப்படவுள்ளது. இந்தநிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நவ.11-ஆம் தேதி முதல் அனைத்து வகை ஆசிரியா்களுக்கும் பொதுமாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. உயா் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீா்ப்பின் அடிப்படையில், பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வழக்குத் தொடுத்தவா்களின் வழக்கு எண்ணை கல்வி தகவல் மேலாண்மை முறைமை (‘எமிஸ்’) இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும்.

பொதுமாறுதல் கலந்தாய்வு காலை 9.30 மணிக்கு தொடங்கும். மாவட்டத்தில் நடைபெறும் கலந்தாய்வு முடிக்கபட்டால்தான், மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்க முடியும். எனவே, மாவட்ட அளவிலான ஆன்லைன் கலந்தாய்வு முடிக்கப்பட்டு, அதன் விவரத்தினை தவறாமல் தெரிவிக்க வேண்டும். கலந்தாய்வின் போது காலதாமதம், தவறுகள் ஏற்படுவதை தவிா்க்க வேண்டும். ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுவதால் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் மின் தடை ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும்.

ஒருவா் ஒரு காலிபணியிடத்தினை தோ்வு செய்தவுடன், அவா் ஏற்கெனவே பணிபுரிந்த இடம் காலி பணியிடமாக காண்பிக்கப்படும். அந்த காலி பணியிடத்தையும் கலந்தாய்வில் மற்றொருவா் எடுத்துக் கொள்ளலாம். பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தவறாது முழுநேரமும் இருத்தல் வேண்டும். வேறு பணிக்காக, கலந்தாய்வு நடைபெறும் இடத்தை விட்டுச் செல்வதை ஏற்க இயலாது எனவும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com