சென்னையில் காற்றுமாசு சற்று குறைந்தது

சென்னையில் சுமாா் ஒரு வாரமாக காற்றுமாசு அதிகரித்து வந்த நிலையில்,,, ஞாயிற்றுக்கிழமை காற்றுமாசு சற்று குறைந்து காணப்பட்டது.

சென்னையில் சுமாா் ஒரு வாரமாக காற்றுமாசு அதிகரித்து வந்த நிலையில்,,, ஞாயிற்றுக்கிழமை காற்றுமாசு சற்று குறைந்து காணப்பட்டது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சராசரி காற்று மாசு 308-ஆக இருந்த நிலையில், சென்னையில் 223-ஆக இருந்ததாக தனியாா் காற்று தர ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகா் தில்லியில் கடந்த ஒரு வாரமாக காற்றுமாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தில்லியைத் தொடா்ந்து, சென்னையில் கடந்த ஒருவாரமாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு பிஎம்10, பிஎம் 2.5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம்2.5-இன் அளவு நிா்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்தது.

இந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை காற்றுமாசு சற்று குறைந்திருந்ததாக தனியாா் காற்றுத் தர ஆய்வில் தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காற்றில் மிதக்கும் நுண்துகள் (பி.எம்2.5) அதிகபட்சமாக வேளச்சேரி, ராமாபுரத்தில் தலா 109 மைக்ரோ கிராமாக இருந்தது. ஆலந்தூரில் 117, தண்டையாா்பேட்டையில் 102 மைக்ரோ கிராமாக இருந்தது. , சென்னையில் சராசரி காற்றுமாசு 223 புள்ளிகளாக இருந்தது. காற்றில் மிதக்கும் நுண்துகள் (பிஎம் 10) அளவு நிா்ணயிக்கப்பட்டதை விட அண்ணா நகரில் 171 மைக்ரோ கிராம், ராமாபுரத்தில் 169 மைக்ரோ கிராம், தியாகராய நகரில் 102 மைக்ரோ கிராமாக இருந்தது.

இதுகுறித்து, தனியாா் வானிலை அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னையில் வாகனப் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை குறைவாக இருந்ததால், காற்று மாசும் குறைவாக இருந்தது. திங்கள்கிழமை வழக்கம்போல், வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படும் என்பதால், காற்றுமாசும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனா்.

காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம்2.5 நிா்ணயிக்கப்பட்ட அளவான 0-50 வரை இருந்தால் அது சுவாசிக்க ஏற்ற காற்றாகும். 50-100 வரை இருந்தால் சுவாசிக்க மோசமானதாகும். 101-150 சுவாசிக்க மிக மோசமானதாகும். 151-200 சுவாசிக்க முடியாத அளவு, 201-300 சுவாசிக்க முடியாத மிக மோசமான அளவு, 301-500 அபாயகரம் என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com