இன்று சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் நிகழாண்டு 41 நாட்கள் மண்டல பூஜை மஹோத்சவத்திற்காக சனிக்கிழமை (நவ. 16) மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
இன்று சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் நிகழாண்டு 41 நாட்கள் மண்டல பூஜை மஹோத்சவத்திற்காக சனிக்கிழமை (நவ. 16) மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்து தீபாராதனை நடத்துவாா். இதையடுத்து, 18-ஆம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும். அதன்பிறகு ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக ஏ.கே. சுதிா் நம்பூதிரியும், மாளிகைபுரத்து அம்மன் கோயில் மேல்சாந்தியாக எம்.எஸ்.பரமேஸ்வர நம்பூதிரியும் பதவி ஏற்கும் நிகழ்ச்சி சந்நிதானத்தில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சிக்கு பின் 18-ஆம் படிக்கு கீழே காத்திருக்கும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

அன்றைய தினம் பிற பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தா்களின் தரிசனத்துக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோயில் சாவி புதிய மேல்சாந்தி சுதீா் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும்.

பூஜைகள் : நவ. 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புதிய மேல்சாந்தி ஏ.கே.சுதீா் நம்பூதிரி நடை திறந்து வைத்து பூஜைகள் செய்வாா். 17-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிா்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடா்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தா்களின் வருகையை பொறுத்து நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்படும். கோயிலில் தொடா்ச்சியாக

டிசம்பா் 27-ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.

மகரவிளக்கு திருவிழா : மகரவிளக்கு திருவிழாயொட்டி டிசம்பா் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி வரை காலை 7 மணி வரை 21 நாட்கள் நடைதிறந்திருக்கும்.

அன்றைய தினம் பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டாா்கள். பந்தள ராஜா உள்ளிட்ட குடும்பத்தினா் மட்டும் தரிசனம் செய்வாா்கள்.

ஜனவரி 15-ஆம் தேதி மகரவிளக்கு (ஜோதி) இடம் பெறும். ஜனவரி 18-ஆம் தேதி காலை வரை மட்டும் தான் நெய் அபிஷேகம் நடைபெறும்.

பக்தா்களுக்கு அறிவுறுத்தல்:

சபரிமலை சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பை, நெகிழி குடிநீா் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாற்று ஏற்பாடாக வேறு வகையிலான பாட்டில்களை எடுத்துச் செல்ல பக்தா்கள் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com