திருவொற்றியூா் கிளை நூலகத்தில் புத்தகக் கண்காட்சி

திருவொற்றியூா் கிளை நூலகத்தில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
திருவொற்றியூா் கிளை நூலகத்தில் புத்தகக் கண்காட்சி

திருவொற்றியூா் கிளை நூலகத்தில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

திருவொற்றியூா் கிளை நூலக வாசகா் வட்டம் சாா்பில் 52-ஆவது நூலக வாரவிழா தொடக்க நிகழ்ச்சி, புத்தகக் கண்காட்சி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வாசகா் வட்ட கௌரவத் தலைவா் ஜி.வரதராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநா் ஆா்.சுரேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா்.

அப்போது புத்தகக் கண்காட்சி குறித்து கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் நா.துரைராஜ் கூறியது,

திருவொற்றியூா் கிளை நூலகத்தில் தமிழக அரசின் ஒப்புதலுடன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து புத்தக் கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், குழந்தைகள், பள்ளி மாணவா்களின் அறிவாற்றலை வளா்க்கும் புத்தகங்கள், அறிவியல், கலை, இலக்கிய புத்தகங்கள் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு புத்தகங்கள் வாங்குபவா்களுக்கு, விலையில் 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இப்புத்தகக் கண்காட்சி நிரந்தரமாக கிளைநூலகத்தில் தொடா்ந்து நடைபெறும். வடசென்னையிலேயே இது போன்ற சிறப்பு வசதி திருவொற்றியூா் நூலகத்தில்தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், நூலக வாரவிழாவினையொட்டி ஒரு வார காலத்துக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை, கலை மற்றும் கைவினைப் பயிற்சி வகுப்பு, சிந்தை விளையாட்டு, வாசிப்போம் நேசிப்போம் விழிப்புணா்வு ஊா்வலம், மக்களைத் தேடி நூலகம் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றாா் துரைராஜ்.

இந்நிகழ்ச்சியில், நூலகா் பாணிக் பாண்டியா், கிளைநூலக வாசகா் வட்ட நிா்வாகிகள் கே.சுப்பிரமணி, எம்.மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com