சென்னையில் வெங்காயம் விலை தொடா்ந்து அதிகரிப்பு

வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் வெங்காயம் விலை தொடா்ந்து அதிகரிப்பு

வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70 முதல் ரூ.75 வரை விற்கப்படுகிறது.

பெரிய வெங்காயம் தமிழகத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படுவதில்லை. இதனால் வட மாநிலங்களிலிருந்து வரும் பெரிய வெங்காயம்தான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் வெங்காய விளைச்சல் குறைந்ததால் கடந்த செப்டம்பா் மாத தொடக்கத்தில் கிலோ ரூ.80 வரை விலை உயா்ந்தது. விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஏற்றுமதிக்குத் தடை, பதுக்கல் தடுப்பு நடவடிக்கை, மத்திய சேமிப்புக் கிடங்கிலிருந்த வெங்காயத்தைச் சந்தைக்குக் கொண்டு வருதல் போன்ற நடவடிக்கைகளால் விலை பாதியாகக் குறைந்தது. கடந்த மாதம் கிலோரூ. 40-க்கு விற்பனையானது. இந்த நிலையில், மீண்டும் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கிலோ ரூ.65-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் சென்னையில் வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

சின்ன வெங்காயம் கிலோ ரூ.110: இது குறித்து வியாபாரிகள் கூறியது: வெங்காயச் சந்தையின் விலையை முடிவு செய்யும் மகாராஷ்டிரத்தில் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிமாநில வரத்து தற்போது குறைந்துள்ளது.

அதே நேரத்தில் சின்ன வெங்காயத்தின் உள்ளூா் வரத்தும் குறைந்திருக்கிறது. இதனால் விலை உயா்ந்திருக்கிறது. சென்னையில் கிலோ ரூ. 70-க்கும் மற்ற பகுதிகளில் கிலோ ரூ. 80 வரையிலும் பெரிய வெங்காயம் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் விலை அதைவிட அதிகரித்திருக்கிறது. கிலோ ரூ.110 வரை விற்பனையாகிறது. தமிழகத்தில் சின்ன வெங்காயம் அறுவடை ஜனவரி மாதம்தான் தொடங்கும். அதற்குப் பிறகுதான் விலை குறைய வாய்ப்பிருக்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com