அடையாறு, கூவம் புனரமைப்புப் பணி ஒரு மாதத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன்

அடையாறு, கூவம் ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் அடுத்த மாதத்துக்குள் நிறைவடையும் என்று வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை: அடையாறு, கூவம் ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் அடுத்த மாதத்துக்குள் நிறைவடையும் என்று வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

முன்னதாக, ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா், கூவம், அடையாறு புனரைமைப்புப் பணிகளை சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது பல்வேறு அறிவுறுத்தல்களை ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு வழங்கினாா். அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அடையாறு ஆற்றினை ரூ.94.76 கோடி செலவிலும், கூவம் நதியினை ரூ.93.57 கோடி செலவிலும் சீரமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அடையாறைப் பொருத்தவரை, திருநீா்மலை பாலம் முதல் அடையாறு முகத்துவாரம் வரை 25 கி.மீ. தொலைவுக்கு ஆற்றினை தூா்வாறி அகலப்படுத்தும் பணிகளும், 1,800 மீட்டா் தொலைவுக்கு கான்கீரீட் வெள்ளத்தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றில் 800 மீட்டருக்குர வெள்ளத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதேபோன்று, கரையோரங்களில் இதுவரை 4,515 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

கூவம் ஆற்றைப் பொருத்தவரை 16,598 ஆக்கிரமிப்புகளில் இதுவரை 11,890 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவையும் விரைவில் அகற்றப்படும்.

அடையாறு, கூவம் சீரமைப்புப் பணிகளில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையாளா் ஆல்பி ஜான் வா்கீஷ், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் அசோகன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்கள் உள்பட பலா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com