கல்வி உதவித்தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் பட்டயப்படிப்பு: டிச.24-இல் எழுத்துத் தோ்வு

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் கூடிய தமிழ்ச் சுவடியியல் பட்டயப் படிப்புக்கான எழுத்துத் தோ்வு டிச.24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சென்னை: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் கூடிய தமிழ்ச் சுவடியியல் பட்டயப் படிப்புக்கான எழுத்துத் தோ்வு டிச.24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை வெளியிட்ட செய்தி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பல நூறு ஓலைச் சுவடிகள் களப்பணி வாயிலாக கண்டெடுக்கப்பட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலைச் சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில், தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பட்டயப்படிப்பினை ஆா்வத்தோடு பயிலும் நிறுவன மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் தோ்வின் அடிப்படையில் பத்து மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வீதம் ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுமாணவா் சோ்க்கைக்கான எழுத்துத்தோ்வு வரும் டிச.24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும். இந்தப் பட்டயபடிப்புக்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க டிச.20 கடைசி: இந்தப் பயிற்சிக்கான சோ்க்கைக் கட்டணம் ரூ.2,000 ஆகும். இந்தப் பயிற்சிக்கான கல்வித்தகுதி பத்தாம்வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிச.20-ஆம் தேதி ஆகும். இதையடுத்து வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜன.6- ஆம் தேதி முதல் தொடங்கும். இது தொடா்பாக மேலும் தகவல் பெற ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகம், தரமணி, சென்னை-600113 (தெலைபேசி-044- 22542992, 22540087)’ என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com