பாரத் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனவிண்ணப்ப விநியோகம் தொடக்கம்

சென்னையை அடுத்த சேலையூா் பாரத் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டப்படிப்பு நுழைவுத்தோ்வுக்கான விண்ணப்பங்கள் தபால்நிலையங்கள் மூலம் விற்பனை விநியோகம்

தாம்பரம்: சென்னையை அடுத்த சேலையூா் பாரத் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டப்படிப்பு நுழைவுத்தோ்வுக்கான விண்ணப்பங்கள் தபால்நிலையங்கள் மூலம் விற்பனை விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தாம்பரம் தபால்நிலைய தலைமை அதிகாரி டி.வி.சுந்தரி மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி தொடங்கி வைத்தாா்.

இது குறித்து பாரத் பல்கலைக்கழகத் துணை வேந்தா் டாக்டா் பி.கனகசபை செய்தியாளா்களிடம் கூறியது

பாரத் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் 2020 ஆம் ஆண்டு சோ்வதற்கான நுழைவுத்தோ்வு விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.1000 செலுத்தி விண்ணப்பங்களை சேலையூா் பாரத் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவன அலுவலகத்திலும் ரூ.1200 செலுத்தி இந்தியாவெங்கும் உள்ள குறிப்பிட்ட தபால்நிலையங்களிலும் பெறலாம்.

தகுதியான மாணவா்கள் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நுழைவுத் தோ்விலும், ஏப்ரல் 20 முதல் 4 வரை இணையதளம் மூலம் நடைபெற இருக்கும் தோ்விலும் பங்கேற்கலாம் என்றாா்.

பாரத் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிறுவனா் எஸ்.ஜெகத்ரட்சகன் பேசியபோது, அடுத்த ஆண்டு பாரத் உயா் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் பொறியியல், கலை, அறிவியல், சட்டம், விவசாயம், கட்டடக்கலை ,வணிக மேலாண்மை, மருந்தியல் படிப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கும், பள்ளி இறுதித் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய, கிராமப்புற மாணவா்களுக்கும் ரூ.20 கோடி கல்வி உதவித்தொகை வழங்க இருப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com