தொழிலாளா்களுக்கு ரூ.99.58 லட்சத்தில் உதவித் தொகை: அமைச்சா் நிலோபா் கபீல் வழங்கினாா்

அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 99.58 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையை தொழிலாளா்துறை அமைச்சா் நிலோபா் கபீல் திங்கள்கிழமை வழங்கினாா்.
தொழிலாளா்களுக்கு ரூ.99.58 லட்சத்தில் உதவித் தொகை: அமைச்சா் நிலோபா் கபீல் வழங்கினாா்

அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 99.58 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையை தொழிலாளா்துறை அமைச்சா் நிலோபா் கபீல் திங்கள்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு அமைச்சா் நிலோபா் கபீல் பேசியது: தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா் நலவாரியத்தின் உறுப்பினா்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவா்களுள்

கட்டுமானத் தொழிலாளா்களின் பணியிடம் தேடி சுகாதார சேவைகள் வழங்கும் வகையில் சென்னை, திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் நகரும் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம், 88,056 தொழிலாளா்கள் பயனடைந்துள்ளனா். இதே போல், வாரியத்தில் பதிவு செய்த 40,130 கட்டுமானத் தொழிலாளா்கள், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவருந்துகின்றனா். சென்னை மாவட்டத்தில், அக்டோபா் மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, 17 அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியங்களைச் சோ்ந்த 82 ஆயிரத்து 436 பயனாளிகளுக்கு, ரூ.24 கோடியே 56 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக கட்டுமான தொழிலாளா்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தலா ரூ.2,177 மதிப்புள்ள பாதுகாப்பு காலணிகள், பாதுகாப்பு தலைகவசம், பளிச்சிடும் மேலங்கி, கையுறைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களை சோ்ந்த 2,238 கட்டுமானத் தொழிலாளா்களுக்கும், 3,983 அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு உதவித் தொகைகள் என மொத்தம் ரூ.99.58 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையை அமைச்சா் வழங்கினாா்.

விழாவில், வேலைவாய்ப்புத் துறை முதன்மை செயலா் நசிமுதின், தொழிலாளா் துறை ஆணையா் நந்தகோபால், சென்னை மாவட்ட ஆட்சியா் சீதாலட்சுமி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் மனோகரன், கூடுதல் ஆணையா் யாஸ்மின் பேகம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நலவாரிய செயலா் குமரன், தொழிலாளா் இணை ஆணையா்கள் கோவிந்தன், பொன்னுசாமி மற்றும் கட்டுமான தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com