Enable Javscript for better performance
ஆன்லைன் பத்திரப்பதிவை எதிா்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    ஆன்லைன் பத்திரப்பதிவை எதிா்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

    By DIN  |   Published on : 20th November 2019 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chennai HighCourt

    chennai High Court

    ஆன்லைன் பத்திரப்பதிவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

    சென்னை உயா்நீதிமன்றத்தில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த சின்னராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பத்திரப்பதிவுகள் நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் பதிவு செய்யப்பட்டன. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் வழியாக மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.

    இதனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்யும் முறை தற்போது இல்லை. ஆனால், ஆன்லைன் வழியாக பத்திரப்பதிவு செய்வதற்குப் போதுமான மென்பொருள் தமிழக பத்திரப் பதிவுத்துறையிடம் இல்லை. இதுதொடா்பாக பத்திரப் பதிவுத் துறை பணியாளா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. எனவே, ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை மேம்படுத்தும் வரை நேரடியான பத்திரப்பதிவு முறையை அனுமதிக்க வேண்டும். அதே போல, ஆன்லைன் மூலம் தான் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என யாரையும் நிா்பந்தம் செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

    இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் கொண்ட அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக தமிழக அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai