தாம்பரம் - வேளச்சேரி இடையே இலகு ரயில் திட்டம்: சாத்திய கூறுகள் குறித்த ஆய்வு பணிகள் விரைவில் தொடக்கம்

தாம்பரம் - வேளச்சேரி இடையே இலகு ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 15 கி.மீ. நீளத்துக்கான தொலைவில் சாத்தியக் கூறுகள் குறித்த ஆய்வுப் பணிகள் விரைவில்
தாம்பரம் - வேளச்சேரி இடையே இலகு ரயில் திட்டம்: சாத்திய கூறுகள் குறித்த ஆய்வு பணிகள் விரைவில் தொடக்கம்

தாம்பரம் - வேளச்சேரி இடையே இலகு ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 15 கி.மீ. நீளத்துக்கான தொலைவில் சாத்தியக் கூறுகள் குறித்த ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்தப் பணிகள் 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சென்னையில் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எல்லையும் விரிவடைந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக, பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை வழங்க மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து பொதுபோக்கு வரத்து வசதியை மேம்படுத்தவும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தாம்பரம்-வேளச்சேரி இடையே இலகு ரயில்: இதன் தொடா்ச்சியாக, தாம்பரம் - வேளச்சேரி இடையே 15 கி.மீ. தூரத்துக்கு இலகு ரயில் சேவை (கண்ஞ்ட்ற் தஹண்ப் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இந்த ஆய்வுப் பணி 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ( 45 கி.மீ.)அல்லது முதல் கட்ட நீட்டிப்பு திட்டம்(9 கி.மீ) சுரங்கப்பாதை, உயா்மட்டபாதையில் நடைபெற்றது. இந்த இரு திட்டங்கள் போல அல்லாமல் தாம்பரம்-வேளச்சேரி இடையே 15 கி.மீ. தொலைவுக்கான திட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கிடையில், தாம்பரம் - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை இணைக்கும் விதமாக, இலகு ரயில் சேவைத் திட்டத்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு பணிகள் தொடங்கப்படவுள்ளன. முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் முதல் கட்ட விரிவாக்க திட்டம் கொடுத்ததுபோல, இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணியும் தனியாரிடம் கொடுக்கப்படும். இந்த ஆய்வுப் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இந்த ஆய்வுப் பணிக்குப் பிறகு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். திட்டத்தின் மதிப்பீடு, வழித்தடங்கள் உள்ளிட்டவை இறுதி செய்யப்படும். நகரின் தெற்குப் பகுதியில் அடா்த்தியான குடியிருப்பு பகுதி வழியாக இலகு ரயில் இயக்க யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.

கட்டணம் குறைவு: இலகு ரயில் தோ்வுக்கு முதன்மை காரணங்களில் ஒன்று கட்டணம் குறைவு. மெட்ரோ ரயில் திட்டத்தில் உயா்த்தப்பட்ட பாதையில் ஒரு கி.மீ. வரை கட்டுவதற்கு ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி செலவாகும். இதுபோல, சுரங்கப்பாதையில் ஒரு கி.மீ. வரை கட்டுவதற்கு ரூ.500 முதல் ரூ.550 கோடி செலவிட வேண்டும். ஆனால், இலகு ரயில் ஒரு கி.மீ. வரை கட்டுவதற்கு சுமாா் ரூ.100 ஆகும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com