தடை செய்யப்பட்ட நெகிழியைப் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.79 லட்சம் அபராதம்

தடை செய்யப்பட்ட நெகிழியைப் பயன்படுத்திய நிறுவனங்களிடமிருந்து ரூ.79.84 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட நெகிழியைப் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.79 லட்சம் அபராதம்

தடை செய்யப்பட்ட நெகிழியைப் பயன்படுத்திய நிறுவனங்களிடமிருந்து ரூ.79.84 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில், ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்கள் முற்றிலும் தடை செய்யப்படுவதாக முதல்வா் சட்டப்பேரவை அறிவித்திருந்தாா். இதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களிலும் 14 வகையான நெகிழிப் பொருள்கள் தடைசெய்யப்பட்டு மாநகராட்சி அலுவலா்களால் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் ஆலோசனையின்படி, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாடு தடை பற்றிய விழிப்புணா்வு, பறிமுதல் செய்யும் பணியும், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கடந்த ஜூன் 17-ஆம் தேதி முதல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் (நெகிழி) சேமிப்பு மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கும் பணியையும் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, வளசரவாக்கம் மண்டலம், 143 முதல் 155 வரையுள்ள அனைத்து கோட்டங்களுக்குள்பட்ட வளசரவாக்கம், ஆழ்வாா் திருநகா், நெற்குன்றம், மதுரவாயல், போரூா் மற்றும் ராமாபுரம் ஆகிய பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், சாலையோர கடைகள் ஆகியவற்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்பாடு குறித்து 463 வணிக நிறுவனங்களில் கடந்த 3 நாள்களாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய 60 நிறுவனங்களுக்கு ரூ.54,200 அபராதம் விதிக்கப்பட்டு, 67 கிலோ வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. தமிழக அரசால் நெகிழிகள் பயன்பாடு தடை செய்யப்பட்ட கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் நவம்பா் மாதம் 20-ஆம் தேதி வரை வளசரவாக்கம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் 28,997 வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.9 லட்சத்து 54 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டு, 18 டன் வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட முதல் 15 மண்டலங்களில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் நவம்பா் மாதம் 20-ஆம் தேதி வரை, 3 லட்சத்து 42 ஆயிரத்து 994 வணிக நிறுவனங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 308 டன் வரையிலான தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ.79.84 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com